close
Choose your channels

தனுஷ் திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த 'வாத்தி': மொத்தம் எத்தனை கோடி தெரியுமா?

Saturday, March 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் தமிழ் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் உலகம் முழுவதும் சமீபத்தில் இந்த படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது

ஏற்கனவே தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ 100 கோடி வசூல் செய்து சாதனை செய்த நிலையில் தற்போது ’வாத்தி’ படமும் 100 கோடி வசூல் செய்ததை அடுத்து அவருடைய அடுத்த படங்கள் அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன

இந்த நிலையில் தனுஷின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ’வாத்தி’ திரைப்படம் பெற்றுள்ளது. அதாவது இந்த படம் உலகம் முழுவதும் மற்றும் 118 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. திரையரங்கில் மட்டுமின்றி சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியான நிலையில் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷ், சம்யுக்தா, சாய்குமார், சமுத்திரகனி, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் ‘வாத்தி’ வெற்றியால் இந்த படத்தின் பிசினஸ் மிக அபாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.