'புலி' படத்தின் அமெரிக்க விநியோக உரிமை ரூ.2 கோடியா?

  • IndiaGlitz, [Tuesday,August 18 2015]

இளையதளபதி விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்பட பலர் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் அமெரிக்க நாட்டின் விநியோக உரிமை இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு 'புலி' படத்தின் அமெரிக்க உரிமை விற்பனையாகியுள்ளதாகவும், இதுவரை வெளியான விஜய் படங்களில் இந்த தொகைதான் மிக அதிகமானது என்றும் தகவல்கள் கூறுகின்றன. கண்டிப்பாக இந்த படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக விநியோகிஸ்தர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 6.5 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை விட இந்த படத்தின் வசூல் சாதனை படைக்கும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பாகுபலி' படத்தின் சாதனையை 'புலி' முறியடிக்க வேண்டும் என்றே விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. புலி படத்தின் மற்ற பகுதிகளின் விநியோக உரிமைகளும் மிகப்பெரிய தொகைகளுக்கு விற்பனை செய்து வருவதை பார்க்கும்போது கண்டிப்பாக விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யும் என்றே கூறப்படுகிறது.

More News

ரஜினி, கமலை அடுத்து விஜய்யிடம் ஆதரவு கேட்ட விஷால் அணி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாகிவிட்டது...

கபாலி டைட்டில் அறிவித்த சிலமணி நேரங்களில் எழுந்த டிரண்டும், பிரச்சனையும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் படத்தின் டைட்டிலை நேற்று இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் அதிகாரபூர்வமாக 'கபாலி' என்று அறிவித்தார் ...

சொந்த பட நிறுவனம் தொடங்கினாரா கார்த்தி?

வயதினிலே' என்ற வெற்றிப்படத்தை தயாரித்த நிலையில், அவரது சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தியும் "பிரின்ஸ் புரடொக்ஷன்ஸ்' என்ற பெயரில்...

'தல' என்ற தாரக மந்திரம்தான் பல படங்களின் புரமோஷன் எந்திரம்

'தல' என்ற வார்த்தைக்கு மயங்காத திரையுலக ரசிகர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு அந்த மந்திர சொல் அனைவரையும் இழுத்துள்ளது....

சூப்பர் ஸ்டாரை அடுத்து உலக நாயகனிடம் ஆதரவு கேட்ட விஷால் அணி

நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சரத்குமார், விஷால் ஆகிய இரு தரப்பினர்களும் மும்முரமாக வாக்குகளை சேகரித்து வரும் நிலையில் ...