close
Choose your channels

பாலிவுட்டிலும் சாதனை படைத்த இளையதளபதியின் 'புலி'

Saturday, August 22, 2015 • தமிழ் Comments

இளையதளபதி விஜய் நடித்த புலி' படத்தின் டிரைலர் இணையதளங்களில் ஒரு பெரிய சூறாவளியை ஏற்படுத்திவிட்ட நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதே வேகத்தில் 'புலி' படத்தின் வியாபாரமும் தொடர்ந்து ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை மிகப்பெரிய தொகை ஒன்றுக்கு SVR Media நிறுவனம் ஏற்கனவே பெற்று, புலி டிரைலரை தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் 1200 தியேட்டர்களில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'புலி' படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையின் வியாபாரம் முடிந்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. கோல்ட் மைன் நிறுவனம் இந்த படத்தை மிக அதிக விலைக்கு சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளதாகவும், ஒரு தமிழ் திரைப்படம் இந்த அளவுக்கு பெரிய தொகைக்கு சாட்டிலைட் உரிமை விற்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

'புலி' திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் மற்ற ஏரியாக்களின் உரிமைகளை பெற விநியோகிஸ்தர்களிடன் பெரும் போட்டி நடைபெறுவதாகவும், விரைவில் இந்த படத்தின் அனைத்து ஏரியாக்களின் உரிமையின் வியாபாரமும் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz