ரஜினிக்காக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த இந்து அமைப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 24 2017]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்கள் சந்திப்பின்போது அரசியல் குறித்து அவர் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் பெரும்புயலை கிளப்பிவிட்டது. ரஜினி அரசியலுக்கு வருவதை பெரிய கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு கொடுத்தபோதும், அவர் அரசியலுக்கு வந்தால் பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கும் கட்சிகளும், தங்களை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தி கொள்ளும் அரசியல்வாதிகளும் ரஜினியை எதிர்த்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இந்து சத்திய சேனா என்ற அமைப்பு கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணத்தையும் மனதில் கொண்டு தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றம் உண்டாக்க வேண்டும் என்ற சமூக ஆர்வத்துடன், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார். இதை சில அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் அவர்களின் கருத்திற்கு முரண்பாடாக பேசிக்கொண்டும் மற்றும் சில அமைப்பை சார்ந்தவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் அவரது உருவபொம்மையை எரித்தும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே ரஜினிகாந்த் அவர்களுக்கும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று எங்கள் அகில இந்திய இந்து சத்திய சேனாவின் அமைப்பின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

ஆர்மீனியா நாட்டிற்கு செல்லும் செல்வராகவன்-சந்தானம் கூட்டணி

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் செல்வராகவனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

ரஜினியை விமர்சித்தாரா சத்யராஜ்? சிபிராஜ் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து கடந்த வாரம் பேசியதில் இருந்து பல்வேறு தரப்பினர் அவரை விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்போம் என்று இதுவரை எந்த அரசியல் தலைவரும் கூறவில்லை. மாறாக அவர் அரசியலுக்கே வரக்கூடாது என்று விமர்சனம் செய்து வருகின்ற&

நீண்ட இடைவெளிக்கு பின் வெளியான கலைஞரின் புகைப்படம். திமுக தொண்டர்கள் உற்சாகம்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதன்முதலாக எம்.எல்.ஏஆக தேர்வு பெற்றார்...

பெண்களைப் பாலியல் ரீதியாக இழிவுபடுத்திப் பேசிய 73 வயது நடிகர்

இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் பெண்களின் வாழ்க்கை முறை முன்னேறி வருகிறது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் சமூகத்தில் உயர்ந்த பதவிகள் பெற்று சொந்தக்காலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோலிவுட் திரையுலகில் நடந்த இரண்டாவது அதிசயம்.

கடந்த சில வருடங்களாக உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி நடித்த படங்களுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைப்பது என்பது எட்டாக்கனியாக இருந்தது. ஆனால் தற்போது அதே கட்சி ஆட்சி புரிந்தாலும் இந்த விஷயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது...