close
Choose your channels

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Monday, October 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் இசை அமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ மற்றும் ‘நட்பே துணை’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் மூன்றாவது படத்திற்கு தயாராகி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் நடிக்கயிருக்கும் மூன்றாவது படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் முந்தைய இரண்டு படங்களையும் தயாரித்த சுந்தர்சி-குஷ்புவின்ன் அவ்னி மூவிஸ் இந்த படத்தையும் தயாரிக்கின்றது.

இந்த படத்திற்கு ’நான் சிரித்தால்’ என்ற டைட்டிலை ஹிப் ஹாப் தமிழா ஆதி வைத்து ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் ஆயுதபூஜையான இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தை ராணா என்பவர் இயக்க உள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில், வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படம், மற்ற இரண்டு படங்கள் போல் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.