பிக்பாஸ் வீட்டில் ஹிப்ஹாப் தமிழா ஆதி சேவ் செய்த போட்டியாளர்!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 77 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் நான்கே வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ளதால் தற்போது உச்ச கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட 6 பேர்களில் நேற்று ராஜூ காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதனை அடுத்து மீதி உள்ள 5 பேர்களில் ஒருவரை இன்று கமல்ஹாசன் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீர் திருப்பமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.

இதனை அடுத்து கமல்ஹாசன் ஐந்து பேரில் ஒருவரைக் காப்பாற்றும் பொறுப்பை ஹிப் ஹாப் தமிழா ஆதியிடம் ஒப்படைக்க ஒரு சிறிய ட்விஸ்ட் வைத்து அதன்பின் பிரியங்கா காப்பாற்றப்பட்டதாக ஆதி கூறுகிறார். இதனை அடுத்து இரண்டாவது நபராக பிரியங்கா காப்பாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீதி உள்ள நால்வரில் எலிமினேட் செய்யப்படுவது யார் என்பதை இன்று இரவு கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து இன்று அபினய் எலிமினேட் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே நாம் பார்த்தோம்.

More News

ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கிய டாப் 5 வீரர்கள்… எவ்வளவு தெரியுமா?

டி20 ஐபிஎல் கிரிக்கெட்டை ரசிகர்களைவிட கிரிக்கெட் வீரர்களும் அதிகம் விரும்புகின்றனர். அதற்குக் காரணம் ஐபிஎல்

பிக்பாஸ் தான் என்னை டைவர்ட் பண்ணிட்டாரோ? கமலிடம் சொன்ன பிரியங்கா!

பிக்பாஸ் தான் என்னை டைவர்ட் செய்து விட்டாரோ என கமல்ஹாசனிடம் இன்றைய புரொமோ வீடியோவில் பிரியங்கா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலமணி நேரங்களில் 10 லட்சம் லைக்ஸ்: அப்படி என்ன இருக்கு பூஜா ஹெக்டேவின் புகைப்படத்தில்?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே சமூகவலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் மற்றும் பிகினி புகைப்படங்களை பதிவு செய்து

திடீரென முத்தம் கொடுத்த அமீர்: பாவனியின் ரியாக்சன் இவ்வளவுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பாவனிக்கு திடீரென அமீர் முத்தம் கொடுத்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வித்யாபாலனுக்கு தந்தையாக நடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகையும் 'நேர்கொண்ட பார்வை' என்ற திரைப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவருமான வித்யாபாலனுக்கு தந்தையாக தமிழ் நடிகர் ஒருவர் நடித்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது