close
Choose your channels

யாஷிகா-ரித்விகா இணையும் படத்தில் குத்துப்பாட்டு: பாடிய பிரபல இசையமைப்பாளர்!

Wednesday, January 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகை ரித்விகாவும், அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகாவும் இணைந்து நடிக்கும் படம் ’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. இந்த படத்தை எருமசாணி புகழ் ரமேஷ் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி பாடியுள்ளார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்குழுவில் பணியாற்றிய கெளசிக் கிரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்த படத்தில் தன்னிடம் பணியாற்றியவர் இசையமைக்கும் படம் என்பதால் ஒரு பாடலை பாட ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒப்புக்கொண்டு இந்த பாடலை பாடி முடித்துள்ளார்

தனி ஒருவன் படத்தில் இடம்பெற்ற ’கண்ணாலே கண்ணாலே’ மற்றும் ’மீசையை முறுக்கு’ படத்தில் இடம்பெற்ற ’என்ன நடந்தாலும்’ போன்ற பாடல்களைப் போலவே இந்த பாடலும் ஒரு ஃபாஸ்ட் ஃபேஸ் குத்து பாடல் என்றும் இந்த பாடலை கம்போஸ் செய்தவுடன் ஹிப் ஹாப் தமிழா ஆதி தான் பாட வேண்டும் என்று தான் முடிவு செய்ததாகவும் இசையமைப்பாளர் கெளசிக் கூறியுள்ளார்

யாஷிகா ஆனந்த் மற்றும் ரித்விகா முக்கிய வேடத்தில் நடிக்க்கும் இந்த படத்தில் எருமசாணி விஜய், ஹரிஜா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் ஆர்ஜே விக்னேஷ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மொத்தம் 5 இருப்பதாகவும் இந்த பாடல்களை மிர்ச்சி விஜய் எழுதியிருப்பதாகவும் இயக்குனர் ரமேஷ் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.