close
Choose your channels

'மீசையை முறுக்கு' படத்தின் முதல் நாள் வசூல் விபரம்

Saturday, July 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹிப் ஹாப் தமிழா ஆதி சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும், முதன்முதலாக ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி இயக்கவும் செய்த படம் 'மீசையை முறுக்கு'. இந்த படம் நேற்று வெளியாகி சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது
இந்த படம் முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதும் ரூ.1.70 கோடி வசூலாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் இந்த படம் ரூ.13.5 லட்சம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் நல்ல வசூலை பெற்றுள்ளதாக விநியோகிஸ்தர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் முதல் படமே அவரது மீசையை முறுக்கும் அளவுக்கு வசூலை குவித்துள்ளதால் அவரிடத்தில் இருந்து அடுத்த பட அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.