close
Choose your channels

நானியின் 'ஹிட் 3' வெற்றி ஒரு பக்கம் இருக்கட்டும்.. 'ஹிட் 4' படத்தில் தமிழ் ஹீரோ?

Friday, May 2, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடித்த 'ஹிட் 3 ’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த பாகத்தில் ஒரு தமிழ் மாஸ் ஹீரோ நடிக்க இருப்பதாக கூறப்படுவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் குலனூர் இயக்கத்தில் நானி நடித்த ’ஹிட் 3’ திரைப்படம் தொழிலாளர் தினமான நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.44 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த பாகத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்த கார்த்தி, ’ஹிட் 4 ’திரைப்படம் மூலமாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கார்த்தி ஏற்கனவே ’சர்தார் 2’ என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், அடுத்ததாக அவர் ’கைதி 2’ படத்தில் நடிக்கவுள்ளார். அதற்குப் பிறகு தான் அவர் ’ஹிட் 4’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment