ரஜினிக்கு கசின், நயனுக்கு அங்கிள்: முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்

  • IndiaGlitz, [Friday,June 14 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

இந்த நிலையில் அர்னால்டு நடித்த கமாண்டோ, பிரிடேட்டர், எக்ஸ் மென் போன்ற ஆங்கில நடித்த பில் டியூக் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸிடம் 'தர்பார்' படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார். அவர் பதிவு செய்த டுவீட்டில், 'எனக்கு தமிழ் பேச வராது. ஆனாலும் ரஜினியின் அமெரிக்க கசினாகவோ அல்லது நயன்தாராவுக்கு அங்கிளாகவோ நடிக்க தயார். அனிருத் எனக்காக ஒரு சூப்பர் பாட்டு போட்டு கொடுப்பார். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று கேட்டுள்ளார். இந்த பதிவை பார்த்து ஆச்சரியம் அடைந்த ஏ.ஆர்.முருகதாஸ், 'உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.

ஏற்கனவே முருகதாஸ் 'ஸ்பைடர்' படத்தை இயக்கி கொண்டிருந்தபோது இதே டுவிட்டரில் தான் பில் டியூக், ஏ.ஆர்.முருகதாஸிடம், 'லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தால் என்னை சந்தியுங்கள். இருவரும் இணைந்து சர்வதேச தரத்துடன் கூடிய ஒரு படம் எடுப்பது குறித்து ஆலோசனை செய்வோம்' என்று ஒரு டுவீட்டை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

10 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் ஒரு படத்தை முடக்கி விடலாமா? நயன்தாரா படத்தயாரிப்பாளர் ஆவேசம்

கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்படும் ஒரு திரைப்படத்தை கடைசி நேரத்தில் ஒருசில ஆயிரங்கள் செலவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து படத்தின் ரிலீஸை நிறுத்திவிடும் கலாச்சாரம்

ரஜினியை விட கமல்தான் அதிகம் உழைத்தவர்: பாடப்புத்தக சர்ச்சை குறித்து சீமான்

ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினி குறித்த பாடம் இடம்பெற்றது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ரஜினியை விட கமல் தான் அதிகம் உழைத்தவர் என்றும்

செல்போன் கடையில் திருடிய தமிழ் நடிகர் மனைவியுடன் கைது

சென்னையில் உள்ள செல்போன் கடை ஒன்றில் மனைவியுடன் வந்த தமிழ் நடிகர் ஒருவர் அந்த கடையில் விலையுயர்ந்த செல்போன்களை திருடிய காட்சி சிசிடிவியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால்

கேப்டன் விஜயகாந்த் மகனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் இதுவரை 'சகாப்தம்' மற்றும் 'மதுர வீரன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து வந்த 'தமிழன் என்று சொல்' என்ற படம் பாதியிலேயே நிற்கின்றது

என்னிக்கு என்கிட்ட கதை இருந்துருக்கு: அஜித் ரசிகருக்கு வெங்கட்பிரபு பதில்

அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய 'மங்காத்தா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் 'மங்காத்தா 2' எப்போது வரும் என அவ்வப்போது அஜித் ரசிகர்கள் வெங்கட்பிரபுவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.