close
Choose your channels

காதலியுடன் லிவிங் டுகெதர். திருமணத்திற்கு முன்பே அப்பாவாகும் பிரபல ஹீரோ..!

Sunday, March 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஹீரோ ஒருவர் தனது காதலியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவர் திருமணத்திற்கு முன்பே அப்பாவாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஹாரிபாட்டர் என்ற ஹாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த டானியல் கிளிப். இவர் தனது காதலியுடன் கலந்த சில வருடங்களாக லிவிங்டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவரது காதலி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த 'கில் யுவர் டார்லிங்ஸ்’ என்ற படத்தில் எரின் டார்க் என்ற நடிகையுடன் இணைந்து நடித்த ஹாரிபாட்டர் ஹீரோ டானியல், அதன் பிறகு அவரை காதலித்து வந்த நிலையில், சில ஆண்டுகளாக ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வருகின்றனர்

இந்த நிலையில் சமீபத்தில் தனது காதலி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை தனது சமூக வலைதளத்தில் டானியல் கிளிப் அறிவித்துள்ளார். விரைவில் அப்பாவாக போகிறேன் என்று அவரது சந்தோசமான அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.