டாம் குரூஸ் நடித்த 'மிஷன் இம்பாஸிபிள்' 8ஆம் பாகம்.. டீசர் வெளியீடு.. ரிலீஸ் எப்போது?


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த ’மிஷன் இம்பாசிபிள்’ என்ற திரைப்படம் இதுவரை ஏழு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது எட்டாவது பாகத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் டாம் குரூஸ் சீக்ரெட் ஏஜென்ட் ஆக நடித்த ’மிஷன் இம்பாசிபிள்’ என்ற படத்தின் முதல் பாகம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து, தொடர்ச்சியாக இந்த படத்தின் ஏழு பாகங்கள் வெளியானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஏழாம் பாகம் ஏஐ தொழில்நுட்பம் மையமாக கொண்ட கதையம்சம் என்பதும், இந்த படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில், ’மிஷன் இம்பாசிபிள்’ எட்டாவது பாகத்திற்கான புதிய டீசரை தனது சமூக வலைத்தளத்தில் டாம் குரூஸ் வெளியிட்டுள்ளார். ஏழாம் பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி என்பவரே இந்த படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த படம் இந்த ஆண்டு மே 23ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் டீசரின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பாகத்தில் ஒரு கீயை தேடி டாம் குரூஸ் பயணம் செய்யும் நிலையில், இந்த பாகமும் அதையே தேடி அவர் செல்லும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக டீசர் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
Everything you were, everything you've done, has come to this. Mission: Impossible – The Final Reckoning. See you at the movies May 23, 2025. pic.twitter.com/KDt7LbOdTC
— Tom Cruise (@TomCruise) February 9, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com