close
Choose your channels

சூப்பர்டா தம்பி: தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த ஹாலிவுட் இயக்குனர்கள்!

Friday, June 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் தற்போது தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவரது மார்க்கெட் தற்போது உலக அளவில் விரிவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று வெளியாகும் தனுஷின் ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் வெற்றிபெற ஹாலிவுட் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் தங்களது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹாலிவுட் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸின் இயக்கத்தில் உருவாகிவரும் ’தி க்ரே மேன்’ என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தனுஷ் அமெரிக்காவில் உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்தவுடன் அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று தனுஷின் ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதை அடுத்து ரூசோ பிரதர்ஸ் தனுஷுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சூப்பர்டா தம்பி உங்களுடன் பணிபுரிவதில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். ரூசோ பிரதர்ஸ் வாழ்த்துக்கு தனுஷ் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.