close
Choose your channels

'ஜெயலலிதா' படத்தில் இணைந்த ஹாலிவுட் கலைஞர்!

Thursday, September 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் ஏஎல் விஜய் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. ’தலைவி’ என்ற டைட்டிலில் உருவாக இருக்கும் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார்

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ஹாலிவுட் மேக்கப் கலைஞர் ஜேசன் காலின்ஸ் என்பவர் இணைந்துள்ளார். இவர் ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘கேப்டன் மார்வெல்’, பிளேட் ரன்னர் 2049’ போன்ற படங்களில் மேக்கப் கலைஞராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் ஜெயலலிதாவின் நான்கு வித தோற்றத்தில் கங்கனா ரனாவத் நடிக்கவிருப்பதாகவும் இந்த நான்கு தோற்றத்தையும் திரைக்கு கொண்டுவர ஹாலிவுட் மேக்கப் கலைஞர் வரவழைக்கப்பட்டவிருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் தீபாவளி கழித்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தின் மேக்கப் குறித்த ஆலோசனைக்காக இயக்குனர் விஜய் அமெரிக்கா சென்று உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ஜெயலலிதாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் குறித்த காட்சி இருப்பதால், ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் கங்கனா ரனாவத் தற்போது பரத நாட்டியம் கற்று வருவதாக தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.