close
Choose your channels

சிம்புவின் அடுத்த படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்!

Sunday, October 24, 2021 • தமிழ் Comments

சிம்பு நடித்து வரும் படம் ஒன்றில் ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர் இணைந்துள்ள தகவல் திரையுலகினரை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படம் நவம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருவதாகவும் இந்த சண்டைக் காட்சிக்கு ஸ்டண்ட் இயக்குனராக லீ விட்டேகர் என்பவர் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இவர் ’ஃபாஸ்ட் அன் பியூரியஸ் 5’ உள்பட பல ஹாலிவுட் படங்களுக்கு சண்டை பயிற்சி செய்துள்ளார் என்பதும் தமிழில் ’பாகுபலி’ ’விசுவரூபம்’ ’ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களிலும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’வெந்து தணிந்தது காடு’ படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் தொழில்நுட்ப இயக்குனர் இணைந்துள்ளது இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த  படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz