அமித்ஷா உடல்நிலைக்கு என்ன ஆச்சு? அவரே அளித்த விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அவர் குறித்த செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளிவரவில்லை. மேலும் சமீபத்தில் பிரதமர் கூட்டிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அமித்ஷா, மிகவும் சோர்வாக இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளியானதால் அவரது உடல்நிலைக்கு பிரச்சனை என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். எனது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல் வதந்தி என்றும், நான் நலமுடன் இருக்கிறேன் என்றும், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தான் முழு உடல் நலத்துடன் தனது பணிகளை சிறப்புற செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு முதன்முறையாக கொரோனா போன்ற உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது என்றும், நாட்டின் உள்துறை அமைச்சராக எனது பணி இரவு வரை பிஸியாக இருப்பதாகவும், தற்போது இந்த வதந்தி குறித்து என் அறிவுக்கு வந்தபோது எனது கட்சித் தொழிலாளர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளுக்காக இந்த விளக்கத்தை அளிதிதிருப்பதாகவும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 

More News

ஒரு ரூபாய் சம்பளம் போதும், ஆனால் ஒரு கண்டிஷன்: பிக்பாஸ் நடிகையின் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் காமெடி நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான நடிகை ஆர்த்தி தனக்கு ஒரு வருடத்திற்கு இனி ஒரு ரூபாய் சம்பளம் போதும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

டீக்கடைகள், காய்கறி கடைகள் திறக்கலாம்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

தமிழகத்தில் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் ஒருசில தளர்வுகள் குறித்த அறிவிப்பை அவ்வப்போது தமிழக அரசு அறிவித்து வருகிறது.

சன்னி லியோன் பாதையை பின்பற்றும் லட்சுமிமஞ்சு: பரபரப்பு தகவல்கள் 

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இந்த லாக்டவுன் நேரத்தில் சர்வதேச பிரபலங்களுடன் இணைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடி பேட்டிகளை ஒளிபரப்பு வருகிறார் என்பது தெரிந்ததே

விண்வெளித் துறையில் சீனாவின் புதிய சாதனை!!! பூமிக்கு திரும்பிய புதிய விண்கலம்!!!

பல வருடங்களாக சீனா ஒரு நிரந்தரமான விண்வெளி நிலையத்தை இயக்குவதற்கும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்வதற்கும் ஏற்ப பலக்கட்ட சோதனைகளை நடத்தி வருகிறது.

மனிதன் உருவாக்கியதும், கடவுள் உருவாக்கியதும்.. பெண்ணின் முன்னழகை விமர்சனம் செய்த ராம்கோபால் வர்மா!

பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே.