செவிலியர்கள் காலில் விழுந்த மருத்துவமனை டீன்....!  எதற்கு  தெரியுமா..?

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

கோவையில் இஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் ஆன ரவீந்திரன் என்பவர், செவிலியர்கள் காலில் விழுந்து அழுத சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சார்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் என்பவரின் பிறந்தநாளான இன்று தான், ஒவ்வொரு வருடமும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக முன்களப்பணியாளர்களாக செயல்பட்டு செவிலியர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. தற்சமயம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் என்பவற்றின் படத்திற்கு, மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் மற்றும் டீன் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து செவிலியர்கள் குறித்து மருத்துவமனை டீன் கூறியிருப்பதாவது,

மருத்துவர்கள் கூறும் கட்டளைகளை ஏற்று, கொரோனா நோயாளிகளின் அருகில் சென்று சிகிச்சை பார்க்கும் நீங்கள் தான் போற்றுதலுக்கு உரியவர்கள் என்று புகழ்ந்து பேசினார். கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரிந்துவரும் செவிலியர்களின் காலில் விழுந்து வணங்கிய அவர், பேசாமல் கண்கலங்கி நின்றார்.
ரவீந்த்திரன் அவர்களின் இச்செயல் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.