விஜய்யை நான் இன்னும் காதலிக்கின்றேன். அமலாபால்

  • IndiaGlitz, [Monday,November 21 2016]

இந்த ஆண்டின் மிக ஹாட் செய்தி விஜய்-அமலாபால் பிரிவாகத்தான் இருக்கும். 'தெய்வத்திருமகள்' படத்தின்போது தோன்றிய தெய்வீக காதல் ஒருசில ஆண்டுகளில் முடிவுக்கு வந்த போது திரையுலகமே அதிர்ந்தது. விஜய்-அமலாபால் பிரிவுக்கு பலவிதமாக காரணங்கள் கூறப்பட்ட நிலையில் தங்களுடைய பிரிவு குறித்து அமலாபால் முதல்முறையாக மனம் திறந்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
18 வயதில் 'மைனா' படத்தில் நடித்து 23 வயதில் திருமணம் செய்து கொண்டதாகவும், உண்மையில் இந்த வயது திருமணத்திற்கு ஏற்ற வயதில்லை என்றும் அந்த சமயத்தில் தனக்கு இதுகுறித்து அறிவுரை யாரும் கூறவில்லை என்றும் கூறியுள்ளார். யாரும் பிரிவதற்காக காதலிப்பதில்லை. ஆனால் நாங்கள் பிரிய எடுத்த முடிவு கடினமானது. இருப்பினும் விஜய்யை நான் இன்னும் காதலிக்கின்றேன். எப்போதும் அந்த முதல் காதல் என மனதில் இருக்கும்' என்று கூறியுள்ளார்.
விவாகரத்து முடிவு எடுத்த பின்னர் தற்போது தனுஷுடன் வடசென்னை', 'விஐபி 2' மற்றும் 'திருட்டுப்பயலே 2' ஆகிய படங்களில் அமலாபால் நடித்து வருகிறார்.

More News

விரைவில் வருகிறது கூகுள் கண். கேமராவாக மாறும் கண்கள்

கண்பார்வை குறைபாடு உள்ளவர்களின் குறையை போக்க கண்தானம் செய்ய வேண்டும் என்று இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் விழிப்புணர்வு...

கத்திச்சண்டை' ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கியுள்ள 'கத்திச்சண்டை' திரைப்படம் நவம்பர் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது...

நாளை முதல் அஜித்துடன் இணைகிறார் அக்சராஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன், அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தில்...

லட்சுமி ராமகிருஷ்ணனின் கடுமையான விமர்சனத்திற்கு ஜி.வி.பிரகாஷ் பதில்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் இடம்பெறும் டிவி நிகழ்ச்சி...

தலைமறைவாக இருந்த வேந்தர் மூவீஸ் மதன் கைது

கடந்த மே மாதம் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாய் மறைந்து போன வேந்தர் மூவீஸ் மதனை மணிப்பூரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவலை சென்னை பெருநகர ஆணையர் உறுதி செய்துள்ளார்.