வாழ்க்கையில் முதல்முறையாக தவறு செய்தேன். ஹன்சிகாவின் 'போகன்' அனுபவம்

  • IndiaGlitz, [Wednesday,February 01 2017]

'தனி ஒருவன்' என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் மீண்டும் ஜெயம் ரவி, அரவிந்தசாமி இணைந்து நடித்துள்ள 'போகன்' திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது. இந்த படத்தின் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள ஹன்சிகா, இந்த படத்தில் தான் இதுவரை வாழ்க்கையில் செய்யாத தவறு ஒன்றை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக முதன்முதலாக சரக்கு அடித்ததாகவும், நீளமான இந்த காட்சியை படமாக்க பத்து தினங்கள் ஆனதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுபோல் இந்த படத்தில் பல விளையாட்டுத்தனமான வேலைகள் செய்துள்ளதாகவும், அந்த காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாலிவுட்டில் நடிப்பதை விட தமிழில் நடிப்பதையே அதிகம் விரும்புவதாகவும், தமிழ் ரசிகர்கள் தன்னை தமிழ்ப்பெண்ணாகவே கருதுகின்றார்கள் என்றும் ஹன்சிகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More News

ஆதார் பணபரிவர்த்தனை, ஐஆர்சிடிசி சேவை வரி ரத்து உள்பட அதிரடி அறிவிப்புகளுடன் 2017-2018ஆம் ஆண்டின் பட்ஜெட்

2017-2018ஆம் ஆண்டின் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்முறையாக ரயில்வே பட்ஜெட்டையும், பொது பட்ஜெட்டையும் இணைத்து  நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது...

தல அஜித் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்?

தல அஜித் நடித்து வரும் 57வது படமான 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக்கை அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்...

இரண்டே வாரத்தில் பஸ் ஓட்ட கற்றுக்கொண்ட பிரபல நடிகை

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்து வரும் திரைப்படம் 'இப்படை வெல்லும்'. கவுரவ் இயக்கி வரும் இந்த படத்தை லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது...

சூர்யாவின் 'சி3' படத்தில் ஆங்கில பஞ்ச் வசனம்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வரும் 9ஆம் தேதி இந்த படம் சுமார் 2000 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது

மீண்டும் இணையும் ராஜேஷ்-சந்தானம் கூட்டணி

பிரபல இயக்குனர் ராஜேஷின் முதல் படமான 'சிவா மனசில சக்தி' படம் முதல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படம் வரை ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் நடித்தவர் சந்தானம். தற்போது சந்தானம் ஹீரோவாக புரமோஷன் பெற்றுவிட்டதால் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் அவர் நடிக்கவில்லை