சசிகுமாரின் 'கொடிவீரன்' படத்தில் முதன்முதலாக பிரபல நாயகி

  • IndiaGlitz, [Thursday,March 16 2017]

'குட்டிப்புலி' இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்பதும் அந்த படத்தின் டைட்டில் 'கொடிவீரன்' என்பதும் ஏற்கனவே அறிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

'கொடிவீரன்' படத்தில் கோலிவுட்டின் பிரபல நாயகி ஹன்சிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தூள்ளது. விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த ஹன்சிகா, முதன்முதலில் சசிகுமாருடன் ஜோடி சேருகின்றார் என்பதும் அதேபோல் முதன்முதலாக முன்னணி நாயகி ஒருவருடன் சசிகுமார் குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் இயக்குனர் முத்தையா இயக்கவுள்ள இந்த படத்தை சசிகுமாரின் 'கம்பெனி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சசிகலா அணியின் சார்பில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் கள

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா?

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்'.

சிம்புவுடன் இணையும் மூன்றாவது இசையமைப்பாளர்

தமிழ்திரையுலகில் சகலகலா வல்லவனாக அனைத்து துறையிலும் கால்பதிக்கும் ஒருசிலரில் சிம்புவும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே

கோவா நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் ஒன்று கோவா. இந்த மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதி கிடைக்கவில்லை.

நிதியமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இன்று முதன்முதலாக தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.