சசிகுமாரின் 'கிடாரி' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Friday,July 01 2016]

'தாரை தப்பட்டை', வெற்றிவேல்' படங்களை அடுத்து சசிகுமார் நடிப்பில் பிரசாந்த் முருகேசன் இயக்கி வரும் 'கிடாரி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சசிகுமார் தயாரித்து வரும் இந்த படத்தில் வெற்றிவேல்' நாயகி நிகிலா மீண்டும் சசிகுமாருக்கு ஜோடி சேருகிறார்.
மேலும் பிரபல நடிகர் நெப்போலியன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் தயாராகிவிட்டதாகவும் ஜூலை 2ஆம் தேதி அதாவது நாளை இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் 'ராஜதந்திரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த தர்புகா சிவா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ப்ரவீன் அந்தோணி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒரே நேரத்தில் 2 படங்களில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் பேத்தி

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா, மிஷ்கின் இயக்கும் படம் ஒன்றில் அறிமுகமாகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சூர்யா தயாரிக்கும் அடுத்த படத்தின் நாயகன் இவர்தான்

கோலிவுட்டின் பிரபல நடிகரான சூர்யா, முதன்முதலில் '2D எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' என்ற படத்தை தயாரித்தார்....

சிங்கம் போல கர்ஜித்தார் ரஜினி. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த '2.0' தயாரிப்பாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் ஜூலையில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான '2.0'...

'கத்தி' ரீமேக்கில் சதீஷ் கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் நடித்த இரண்டு வேடங்களில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார்...

'ரெமோ'வில் இணைந்த சிவகார்த்திகேயனின் ராசியான ஜோடி

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரெமோ' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதை ஏற்கனவே பார்த்தோம்...