டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணையும் விகடன் டெலிவிஸ்டாஸ்..  'உப்பு புளி காரம்'  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Sunday,April 14 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய சீரிஸான 'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

“உப்பு புளி காரம்” ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில், நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், அட்டகாசமான பொழுதுபோக்கு சீரிஸாக உருவாகியிருக்கும் “உப்பு புளி காரம்” சீரிஸ், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகப் பெரும் விருந்தாக அமையும்

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். இந்த சீரிஸுக்கு இசையமைப்பாளர் ஷேக் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் பார்த்திபன் மற்றும் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடுகளான ஹார்ட் பீட், மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், குறிப்பாக தற்காலத்திய இளைஞர்களிடம் இருந்து அபரிமிதமான அன்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கோட்' ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு சிஎஸ்கே தாரக மந்திரம்.. தளபதி விஜய்யின் முக்கிய அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு விருந்தாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது

ஆர்ஜே விஜய் ஹீரோவாக நடிக்கும் படம்.. ஹீரோயின் இந்த பிரபலமா? ஸ்னீக்பீக் வீடியோ!

கடந்த பல வருடங்களாக தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பட்டிமன்ற பேச்சாளராகவும் இருக்கும் ஆர்ஜே விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஸ்னீக்பீக்

பிரபல ஹீரோவுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா.. டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் வீடியோ..!

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகருடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில்.. தனுஷ்-விக்ரம் கலவையா?

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் முத்தையா தனது மகன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

'தலைவர் 171' படத்திற்கு முன்பே ஒரு லோகேஷ் கனகராஜ் படம்.. மாஸ் நடிகர் தான் ஹீரோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் டைட்டில் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக