வீடியோ: மக்களின் ஆதரவு ஆரிக்கு என்பதை வெளிப்படையாக பேசிய ஹவுஸ்மேட்ஸ்!

நடைபெற்று முடிந்த லக்சரி டாஸ்க்கான ப்ரீஸ் டாஸ்க்கின் போது ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர் என்பதும், அப்போது உறவினர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரே நபர் ஆரி தான் என்பதும் அனைவரும் அறிந்ததே

குறிப்பாக ஷிவானி அம்மாவின் பாராட்டும், கேபி அம்மாவின் பாராட்டும், ஆரிக்கு தான் கிடைத்தது என்பதும், ரம்யாவின் சகோதர் ‘என் தலைவன் ஆரி எங்கே என்று தேடியதையும் பார்க்க முடிந்தது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான வீடியோவில் ‘உறவினர்களின் வருகைக்குப் பின்னர் ரம்யா பாலாஜி, ரியோ உள்பட அனைவரும் ஆரிக்கு வெளியில் இருக்கும் ஆதரவு குறித்து பேசி வருகின்றனர். மக்களின் ஆதரவு ஆரிக்கு தான் இருக்கிறது என்பது உறவினர்கள் வருகையின் மூலம் தெரியவந்தது என்று கூறுகின்றனர்

இதுகுறித்து ரம்யா கூறியபோது, ‘என்னுடைய தம்பி என் தலைவன் எங்கே என்றுதான் கேட்டான் என்று கூற அப்போது ரியோ ’வந்திருந்த அனைவருமே உணர்வுகளுடன் பாராட்டியது ஆரிய மட்டும்தான் என்று ஒப்புக்கொள்கிறார்.

முன்னதாக பாலாஜி, ‘வந்தவங்க எல்லாரும் எதோ ஒன்றை மறைக்கிறார்கள், ஆனால் எதை மறைக்கின்றனர் என்றுதான் தெரியவில்லை’ என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார். மொத்தத்தில் ஆரிக்கு தான் வெளியில் நல்ல ஆதரவு இருக்கிறது என்பதை ஹவுஸ்மேட்ஸ்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்கள் என்பது இந்த உரையாடல் மூலம் தெரிய வருகிறது