close
Choose your channels

சூரரை போற்று படத்திற்கு அமேசான் கொடுத்த தொகை எவ்வளவு?

Sunday, August 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம், திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் வேறு வழியின்றி ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியிடுவதாகவும், அக்டோபர் 30-ஆம் தேதி இந்தப் படம் அமேசான் பிரைமில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் சூர்யா நேற்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்

முதல் முறையாக முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படம் ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சூர்யா மீது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர் என்பதும், அதே நேரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாகவும், திரையுலகில் பலர் குரல் கொடுத்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அமேசான் பிரைம் ’சூரரைப்போற்று’ படத்திற்காக கொடுத்த தொகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ’சூரரைப்போற்று’ படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 60 கோடி என்றும், அந்த 60 கோடியை அப்படியே அமேசான் பிரைம் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் மட்டும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் ஆகியவை சுமார் 40 கோடிக்கு விலைபோனதாகவும், மொத்தத்தில் இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.