பிரபலங்களின் இன்ஸ்டாகிராமில், ஒரு போஸ்ட்-க்கு இவ்வளவு கோடிகளா...? அதிரும் இணையம்....!

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் ஒரு போஸ்ட்-க்கு எவ்வளவு கோடிகள் சம்பாதிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு வருடத்திற்கும் சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் இணையம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் கோடிகளில் புரள்வார்கள் எனலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அவர்களை பின்தொடர்கிறார்கள். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களிலும், பெரும்பாலும் நட்சத்திரங்களே தோன்றுவார்கள். சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி, யுவராஜ் சிங், விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஆமீர்கான், கமல்ஹாசன், சத்யராஜ், விஜய், சூர்யா, விஜய் சேதுபேதி, நயன்தாரா போன்ற சினிமா நட்சத்திரங்களும் இதில் அடங்குவார்கள்.


சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளனர்.


இவர்கள் பதிவிடும் ஒவ்வொரு கருத்திற்கும், புகைப்படத்திற்கும் தனி மதிப்பு உள்ளது. இவர்கள் வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ பக்கங்களுக்கு கமர்ஷியல் நிறுவனங்கள், அவர்களுடைய பொருட்களை பிரபலப்படுத்த பிரபலங்களை நாடுகிறார்கள். குறிப்பிட்ட அந்த தயாரிப்புகள் குறித்து இவர்கள் கருத்து கூறவோ, புகைப்படம் பதிவிடவோ, வீடியோ வெளியிடவோ நிறுவனங்களிடம் இருந்து பல கோடிகள் வாங்குகிறார்கள்.

 


உலகளவில் சர்வதேச விளையாட்டு வீரர்களும், கோலிவுட் பிரபலங்களும் தான் இன்ஸ்டாகிராமில், அதிகளவில் வருமானம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் முதல் 10 இடம் பிடித்த நட்சத்திரங்களின் பட்டியலை இதில் காண்போம்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ - 11.99 கோடி
டுவைன் டக்ளஸ் ஜான்சன் - 11.38 கோடி
அரியானா கிராண்டே - 11.28 கோடி
கெய்லே ஜென்னர் - 11.17 கோடி
செலினா கோம்ஸ் - 10.97 கோடி
கிம் கர்தாஷியன் - 10.60 கோடி
லியோனல் மெஸ்ஸி - 8.74 கோடி
பியான்ஸே நோல்ஸ் - 8.57 கோடி
ஐஸ்டின் பைபர் - 8.31 கோடி
கென்டல் ஜென்னர் - 7.84 கோடி

ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்-க்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - ரூ. 5 கோடி, சம்பளமாக வாங்குகிறார். முதல் 20 இடம் பிடித்தவர்களில், இந்தியாவைச் சார்ந்த பிரபல நட்சத்திரம் கோலி மட்டுமே