close
Choose your channels

அஜித்தின் 'துணிவு' படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள்? கசிந்த தகவல்கள்!

Thursday, November 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இந்த படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘துணிவு’ திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இடம் பெற்றிருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. முதல் பாடல் ’சில்லா சில்லா’ என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார் என்றும் செம குத்து பாடலான இந்த பாடலை வைசாக் இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பாடலான ’காசேதான் கடவுளடா’ என்ற பாடலை ஹிப்ஹாப் தமிழா பாடியுள்ளார் என்று கூறப்படுகிறது. மூன்றாவது பாடல் புரமோஷன் பாடல் என்பதும் ’கேங்க்ஸ்டர்’ என்று தொடங்கும் இந்த பாடல் படம் ரிலீசுக்கு முன்பே வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.