close
Choose your channels

ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.5 கோடி வாங்கும் இந்தியக் கிரிக்கெட் பிரபலம்!

Friday, July 2, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நம்மில் பலருக்கு அக்கவுண்டே இருக்காது. இந்நிலையில் சில பிரபலங்கள்  ஒரு போஸ்ட்டுக்கு கோடிக் கணக்கில் தொகை வாங்குகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையில் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஒரு இன்ஸ்டா பதிவிற்கு ரூ.5 கோடி தொகையை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாவில் அதிகத் தொகை பெறும் பிரபலங்களின் பட்டியலை சமீபத்தில் HopperHQ 2021 வெளியிட்டு உள்ளது. இதில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தில் உள்ளார். கிறிஸ்டியானோ போடும் ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு அவருக்கு ரூ.11.9 கோடி தொகை வழங்கப்படுகிறது.

இவருக்கு அடுத்த படியாக மல்யுத்த வீரரும் பிரபல ஹாலிவுட் நடிகருமான ட்வெய்ன் ஜான்சன் (ராக்) ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு 11 கோடி ஊதியமாகக் பெறுகிறார். அடுத்த நிலையில் 3 ஆவதாக பாப் பாடகர் அரியானா க்ரநேட் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் விராட் கோலி 19 ஆவது இடத்தில் உள்ளார். அவருடைய ஒரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கு ரூ.5 கோடி தரப்படுகிறது. விராட் கோலியைத் தவிர பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்தப் பட்டியலில் 27 ஆவது இடத்தில் இருக்கிறார். அவருடைய ஒரு போஸ்ட்டுக்கு ரூ.3 கோடி வழங்கப்படுகிறதாம். இவர்களைத் தவிர இந்திய அளவில் வேறு பிரபலங்கள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் டாப் 20 லிஸ்டில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி ரூ.8.6 கோடியும் பிரேசிலின் கால்பந்து வீரர் நெய்மர் ரூ.6.1 கோடியும் பெறகின்றனர். இந்த டாப் 20 லிஸ்டில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்தியர் விராட் கோலிதான். வேறு எந்த இந்தியக் கிரிக்கெட் வீரர்களும் இடம்பெறவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் பிரபலங்கள் டிவில்லியர்ஸ், டுபிளசிஸ், டேல் ஸ்டெய்ன் ஆகிய 3 பேரும் இதில் இடம்பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.