யார் இந்த நவோமி ஒசாகா… சாதித்தது என்ன???

 

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா(22) சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். இப்போட்டிக்கான இறுதிச்சுற்றில் பெலாராஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை(31) தோற்கட்டித்து இந்த வெற்றியை சூடினார் நவோமி. மேலும் டென்னிஸ் போட்டிகளில் தேர்ந்த வீராங்கனையாகக் கருதப்படும் செரினா வீல்லியம்ஸை பின்னுக்குத் தள்ளி இப்போட்டியில் நவோமி ஜொலித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சர்வதேச தரத்தில் 6 இடங்கள் முன்னேறி தற்போது 3 ஆம் இடத்தைப் பிடித்து இருக்கிறார் நவோமி.

22 வயதான நவோமி ஒசாகா ஜப்பான் நாட்டின் சார்பாக இதுவரை 3 கிராண்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முடிவை தொடர்ந்து புதிய தரவரிசை பட்டியலை நேற்று சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது. அதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இளம் வீராங்கனை நவோமி ஒசாகா 3 ஆம் இடத்தைப் பிடித்து இருக்கிறார். இந்தப் பட்டியலில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) நம்பர் ஒன் இடத்தையும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2 ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

மேலும் கடந்த 2018 இல் அமெரிக்க ஓபன், கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டி என இரண்டுமுறை டைட்டிலை நவோமி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றிருக்கிறார். மேலும் டென்னிஸ் மகளிர் பிரிவில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் சர்வதேசப் பட்டியலில் முன்னணிக்கு வந்திருப்பதும் இதுவே முதல் முறை.

உலகின் முன்னணி வீராங்கனைகளைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நவோமி ஒசாகாவைக் குறித்து ரசிகர்கள் அதிக மகிழ்ச்சி தெரிவிப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. US ஓபன் இறுதிச்சுற்றில் விக்டோரியா அஸரென்கா மற்றும் நவோமி ஒசாகா ஆகிய இருவரும் நீயா, நானா என்று ஆக்ரோஷமாக விளையாடினர். ஒருமணிநேரம் 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அசரென்காவை 1-6,6-3,6-3 என்ற செட்களில் போராடி வீழ்த்தினார் ஒசாகா.

அதாவது முதல் செட்டில் அதள பாதாளத்தில் தோற்ற ஒசாகா 2,3 ஆவது செட்டில் ரவுண்டு கட்டி கலக்கியிருக்கிறார். US போட்டிகளில் இப்படி ஒரு வீராங்கனை முதல் செட்டை இழந்து அதன்பின் இரு செட்களையும் கைப்பற்றி சாம்பியன் பட்டம் பெற்றது கடந்த 26 ஆண்டுகளுக்குப் பின் இதுதான் முதல் தடவை. இறுதியாக கடந்த 1994 இல் ஸ்பெயின் நாட்டு வீராங்கனை அசரென்கா சான்செஸ் விக்டோரியா இறுதி ஆட்டத்தில் முதல் செட்டை இழந்து அடுத்த இரு செட்களையும் வென்று கோப்பையை கைப்பற்றினார். அதற்குப் பின் நவோமி ஒசாகா இப்படி சாதனைப் படைத்துள்ளார்.

More News

சசிகலா விடுதலையாகும் தேதி: சிறை நிர்வாகம் அறிவித்துள்ளதால் பரபரப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை

துருவ் விக்ரமின் மூன்றாவது படம்தான் இயக்குனரின் மூன்றாவது படம்: சுவராசியமான தகவல் 

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம், கடந்த ஆண்டு வெளியான 'ஆதித்யவர்மா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும் அந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே 

அன்பா பேசினாத்தான் சம்பாதித்து போடுவேன்: அம்மாவிடம் கொஞ்சும் குழந்தையின் வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் அவ்வப்போது குழந்தைகளின் கொஞ்சல் மற்றும் சிணுங்கல் வீடியோக்கள் வெளிவந்து வைரல் ஆகி வருவது தெரிந்தது. அந்த வகையில் அடிக்கு பயந்து அம்மாவிடம் கொஞ்சும் குழந்தை ஒன்றின் வீடியோ

ஏழைகளுக்கு சத்தமின்றி ரூ.85 லட்சம் நிதியுதவி செய்த பிரபல பாடகி: குவியும் வாழ்த்துக்கள்!

இந்த கொரோனா காலத்தில் ஒரு சில லட்சங்கள் நன்கொடையாக கொடுத்து விட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் நபர்களின் மத்தியில் சத்தமின்றி 85 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துவிட்டு

சீரியல் நடிகை தற்கொலை: 2 காதலர்கள் கைது, 3வது காதலர் தலைமறைவு!

தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் அடுத்தடுத்து மூன்று காதலர்களால் ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,.