நான் இந்தியன். இதை எப்படி நிரூபிப்பேன்..?! என் குழந்தைகள் என்னாகும்..?! பயணியிடம் அழுத முஸ்லீம் ஓட்டுநர்..! வீடியோ.

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

மும்பையில் வண்டி ஓட்டுநரான இர்ஷாத் அகமது, என்.ஆர்.சி குறித்த தனது பயங்களை பற்றி பயணி ஒருவரிடம் விவாதிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. நான் தினமும் உழைக்கிறேன், என் குழந்தைகளுக்காக கஷ்டப்பட்டு, அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறேன். என் தந்தை காலமானார், என் தாத்தாவும் இல்லை. நான் உ.பி.யைச் சேர்ந்தவன், எந்த நிலமும் இல்லை. நான் என்ன ஆதாரம் தருவேன்?”

இர்ஷாத் பேசும் வீடியோவை பதிவு செய்த இசைக்கலைஞர் சுமித் ராய், “அவருக்குள் ஒரு பயமும் சங்கடமும் இருந்தது. நான் கிளம்பும்போது அவரை கட்டிப்பிடித்து தேற்றினேன். பின்னர், அவர் அழுதார் என தி குயின்ட் பத்திரிக்கைக்கு இந்த வீடியோவை அனுப்பியபோது கூறியுள்ளார்.

மேலும் தனது குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலம் மற்றும் என்.ஆர்.சி அவர்களை என்ன செய்யும் என்று கவலைப்பட்ட இர்ஷாத், “அவர்கள் (அரசாங்கம்) என்ன செய்வார்கள்? என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. எனது குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கு நான் கடுமையாக உழைக்கிறேன். இதன் காரணமாக அவர்களின் கல்வியும் ஒருநாள் நிறுத்தப்படுமா? ஒரு நபர் தனது குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால் நான் ஒரு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டால், என் குழந்தைகள் என்னுடன் அனுப்பப்பட்டால் என்ன செய்வது? ”

“இங்கிருப்பவர்கள் இங்கு தங்குவதை உறுதி செய்யுங்கள். சட்டவிரோத குடியேறியவர்களை தங்க அனுமதிக்காவிட்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இங்கேயே இருந்தவர்களை நீக்கினால், நாங்கள் எங்கே போவோம்? அந்த மூன்று நாடுகளில் (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்) எதற்கும் நாங்கள் செல்ல விரும்புவதில்லை. அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்லாமல், நாங்கள் கூட அங்கு செல்ல விரும்பவில்லை. அங்குள்ள நிலைமைகள் நன்றாக இல்லை. அந்த மூன்று நாடுகளும் நம் நாடான இந்தியாவை விட சிறந்தவை அல்ல. அந்த முகாம் (தடுப்பு முகாம்) பற்றி அவர்கள் என்ன பேசுகிறார்கள்… ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு சில குளியலறைகள். அத்தகைய இடத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதை நினைத்துப் பார்த்தால்,பயமாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு காரியம் உண்மையில் மேற்கொள்ளப்பட்டால் என்ன நடக்கும்? யாருக்குத் தெரியும், அவர்கள் உண்மையில் அதைச் செய்வார்களா? எனக்கு புரியவில்லை. நான் அதைப் பற்றி யோசித்து கவலைப்படுகிறேன். ஆம், நாங்கள் இந்தியர்கள் என்று அவர்களுக்கு எப்படிச் சொல்வது? என்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? நான் மூன்று ஆண்டுகளாக இந்த காரை ஓட்டுகிறேன். என்னிடம் அது இருக்கிறது, என்னிடம் வங்கி விவரங்கள் உள்ளன. ”

இசைக்கலைஞரான சுமித் ராய், இர்ஷாத் பேசும் வீடியோவை பதிவு செய்த பயணி, அனுபவத்தை விவரிக்கிறார். அவரிடம் ஒரு பயமும் சங்கடமும் இருந்தது, அதைப் பற்றி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் ஒரு இந்து அல்லது முஸ்லிமா என்று கேட்டார். நான் ஒரு இந்து என்று அவரிடம் சொன்னேன். அவர்களின் பயத்தை நாம் ஒருபோதும் புரிந்து கொள்ளவோ, அவர்கள் இடத்திலிருந்து பார்க்கவோ முடியாது. தனது குழந்தைகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்களின் பயங்களிலிருந்து விடுவிக்க அவர் என்ன சொல்ல முடியும் என்று கேட்டார்.என்னால் பதில் சொல்ல முடியவில்லை .