close
Choose your channels

20 ஆண்டுகள் ஆனாலும் விஸ்வரூபம் 2' வெளிவராது: எச்.ராஜா

Thursday, November 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் மிக விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து பொதுப்பணியில் இறங்கவுள்ள நிலையில் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் குவிந்து வருகிறது. குறிப்பாக பாஜகவில் உள்ள தமிழக தலைவர்களுக்கு கமல் ஒரு சிம்மசொப்பனமாக திகழ்கிறார். எனவே அவரை இந்து விரோதி என்று பாஜகவினர் வசைபாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் நீண்டநாள் பெண்டிங் படமான 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 'விஸ்வரூபம் 2' படம் குறித்து கூறியபோது, '20 வருடங்கள் ஆனாலும் கமலின் விஸ்வரூபம் 2 வெளிவராது; கமல் ஒரு இந்துவிரோதி' என்று கூறியுள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு '200 வருடங்கள் ஆனாலும் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது' போன்ற கருத்துக்களை கூறி கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருவதால் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.