'விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக்: மாதவன் - விஜய்சேதுபதி வேடத்தில் நடிப்பது யார் யார்?

  • IndiaGlitz, [Friday,December 25 2020]

இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம் வேதா’ என்ற திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்வில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இந்த படம்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படம் கடந்த சில வாரங்களாக ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன. ஹிந்தியில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தேர்வுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாதவன் நடித்த போலீஸ் கேரக்டரில் சயிப் அலிகான் நடிக்க இருப்பதாகவும், விஜய் சேதுபதி நடித்த கேங்க்ஸ்டர் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் ஷ்ராதா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி உள்பட மற்ற கேரக்டர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தியில் இயக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

More News

விஷால் படத்தில் யுவன் செய்த மியூசிக்கல் மேஜிக்: வைரலாகும் வீடியோ!

விஷால் நடித்து தயாரித்து வரும் 'சக்ரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினியை நலம் விசாரித்த முன்னாள் முதல்வர் மற்றும் கவர்னர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக இன்று மதியம் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு தவிர

எப்படி ஆரிக்கு மட்டும் முதல்ல இது நடக்குது? ஹவுஸ்மேட்ஸ் விவாதம் குறித்து நெட்டிசனின் குறும்படம்!

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆரி மிகவும் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் பேச்சுத்திறமையுடனும் விளையாடி வருவதால் அவரை வெளியேற்ற ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து நாமினேட்

அய்யயோ.. வேண்டாம் சாமி: ரசிகரின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த அர்ச்சனா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அர்ச்சனா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. டாஸ்குகள் உள்பட அனைத்திலும் ஈடுபாட்டுடன்

ரஜினியிடம் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த பிரபல அரசியல் தலைவர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் திடீரென படக்குழுவினர் சிலருக்கு