700% மின்கட்டணம் அதிகம்: 'காலா' நாயகியின் ஷாக்கிங் தகவல்

ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்கப்படாததால் தற்போது மொத்தமாக நான்கு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார ரீடிங் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் பலர் குறைகூறி வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்கள் வீட்டிற்கு பல மடங்கு மின் கட்டணம் வந்துள்ளதாக தங்களுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகர் பிரசன்னா, நடிகை டாப்சி, நடிகை கார்த்திகா நாயர் உள்பட ஒருசிலர் இது குறித்து தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ஹூமா குரேஷி தன்னுடைய வீட்டிற்கு கடந்த மாதத்தைவிட இந்த மாதம் என 700 சதவீதம் அதிகமாக மின்கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எந்த அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கடந்த மாதம் தன்னுடைய வீட்டிற்கு 6000 ரூபாய் மட்டுமே மின்கட்டணம் வந்ததாகவும் ஆனால் இந்த முறை 50,000 ரூபாய் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹூமா குரேஷின் குற்றச்சாட்டு குறித்து மகாராஷ்டிர மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.