close
Choose your channels

மீண்டும் தயாராகும் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: ஷகிலா கேரக்டரில் ரஜினி நாயகியா?

Tuesday, August 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷகிலா என்பதும் அவற்றில் பெரும்பாலானவை கவர்ச்சி படங்கள் என்பதும் அவரது படங்கள் மிகப்பெரிய வசூலை குவித்தது என்பதும் தெரிந்ததே. கடந்த 80, 90களில் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஷகிலா மலையாளத் திரைப்பட உலகினர் எதிர்ப்பு காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரது இமேஜை முற்றிலும் மாற்றியது. அதுவரை ஆண்கள் மட்டுமே ஷகிலாவுக்கு ரசிகர்களாக இருந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பெண்களும் அவரை விரும்பினார் என்பதும் அவரை ’அம்மா’ என்றே எல்லோரும் அழைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒன்றை இயக்குனர் இந்திரஜித் லங்கேஜ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் ஷகிலா கேரக்டரில் நடிக்க ஹுமா குரேஷியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த படத்தை ஷகிலாவே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்த ’காலா’ அஜித் நடித்த ’வலிமை’ உள்பட பல படங்களில் நடித்த ஹூமா குரேஷி, ஷகிலா வேடத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.