'காலா' படத்தில் ஹூமா குரேஷி கேரக்டர் பெயர் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,June 02 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஹூமா குரேஷி இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்றை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் பெயர் ஜரீனா என்றும், இந்த படத்தில் பீம்ஜி என்ற இன்னொரு முக்கிய கேரக்டரும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் ரஞ்சித், சட்டமேதை அம்பேத்கர் அவர்கலின் தீவிர ஆதரவாளர் என்பது தெரிந்ததே. அம்பேத்காரின் உண்மையான பெயரான பீமாராவ் ராம்ஜி என்ற பெயரை சுருக்கி பீம்ஜி என்றுதான் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருக்கும். இந்த நிலையில் பீம்ஜி என்ற கேரக்டர் 'காலா' படத்திலும் உள்ளது என்பதை ஹூமா குரேஷ் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜரீனா கேரக்டரில் தான் நடிப்பதை ஹூமா குரேஷி உறுதி செய்திருந்தாலும் பீம்ஜி கேரக்டரில் நடிப்பது யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரூ.450 கோடி நஷ்டத்திலும் ஊழியர்களுக்கு கருணை காட்டிய சென்னை சில்க்ஸ்

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஏழு மாடிகளும் தீவிபத்தில் சாம்பலாகியுள்ளது...

தமிழ் சினிமாவின் 'ரத்தினம்' மணிரத்னம்: பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அமெரிக்க வார இதழ் 'டைம்' உலகின் 100 சிறந்த படங்கள் குறித்த சர்வே எடுத்தபோது அதில் இடம் பெற்ற ஒரு திரைப்படம் 'நாயகன்'...

இளம் பெண் பொறியாளர் சுட்டுக் கொலை: காதலன் கைவரிசையா?

தலைநகர் டெல்லியை அடுத்த நொய்டா என்ற பகுதியில் அதிகாலையில் இளம்பெண் பொறியாளர்...

கடைசி நிமிடத்தில் அண்ணனை தள்ளிவிட்டு தாலி கட்டிய தம்பி ! மணமகள் வீட்டார் அதிர்ச்சி

திருப்பத்தூரில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகளுக்கு தாலி கட்ட வேண்டிய மணமகனை அவரது தம்பி...

உலக அளவில் சாதனை படைத்து வரும் இந்திய குழந்தைகள்

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் US Scripps National Spelling Bee என்ற ஸ்பெல்லிங் போட்டிகள் 6 முதல் 15 வயது...