close
Choose your channels

முஸ்லீம் என்பதால் பாகுபாடு இருக்கிறதா? கேள்விக்கு போல்டாக பதிலளித்த பிரபல நடிகை!

Friday, July 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஒருவரிடம் நீங்கள் முஸ்லீம் என்பதால் உங்களுக்கு இந்திய சினிமாவில் பாகுபாடு காட்டப்படுகிறதா? எப்படி உணர்கிறீர்கள்? என்று ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பிய நிலையில் வெளிப்படையாக பதிலளித்து இருப்பது ரசிகர்களிடையே பாராட்டை குவித்து வருகிறது.

டெல்லியில் பிறந்து வளர்ந்தவரான ஹுமா குரேஷி மாடலிங் துறையில் ஆர்வம் காட்டிவந்த நிலையில் கடந்த 2012 இல் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான கேங்க்ஸ் ஆஃப் வஸ்ஸேபூர் திரைப்படத்தில் அதுவும் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இதையடுத்து பாலிவுட்டில் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்தியைத் தவிர தமிழ் மற்றும் மலையாளத்திலும் கவனம் செலுத்திவந்த இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படத்தில் செம அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படத்திலும் இடம்பெற்று ரசிகர்களிடையே பாராட்டை குவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல சமையல் கலைஞர் தாலாலில் வரலாற்று திரைப்படமான ‘தார்லா’ திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஜீ5 ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகை ஹுமா குரேஷி கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்காவிற்கு சென்றிருந்த நிலையில் செய்தியாளர்கள் எழுப்பி இருந்த கேள்வியை ஓட்டி ஒரு முக்கிய கேள்வியை நடிகை ஹுமா குரேஷியிடம் எழுப்பினார். அதாவது நீங்கள் முஸ்லீமாக இருப்பதால் இந்திய சினிமாவில் பாகுபாடு அல்லது ஒதுக்கப்படும் வகையில் உணர்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த நடிகை ஹுமா குரேஷி தான் ஒரு முஸ்லீம் என்பதால் தனக்கு எதிராக பாகுபாடு காட்டப்பட்டதாகவோ அல்லது வித்தியாசமாக உணரப்பட்டதாகவோ உணர்ந்ததில்லை.

நான் முஸ்லீம் என்றும் நான் வேறு என்றும் நான் உணரவில்லை. எனது தந்தை டெல்லியின் கைலாஷ் காலனியில் சலீம் உணவகம் நடத்தி வருகிறார். எனது தனிப்பட்ட அனுபவத்தில் நான் அதை உணர்ந்ததில்லை. மக்கள் உணர்ந்திருக்கலாம். கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஒவ்வொரு அரசாங்கமும் பதிலளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

நடிகை ஹுமா குரேஷியிடம் அவருடைய மதத்தை குறித்தும் இந்தியாவில் நடத்தப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு போல்டாக பதிலளித்து இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.