close
Choose your channels

ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல பாலிவுட் நடிகை

Sunday, June 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் நடிகை வித்யாபாலன் நடித்து தேசிய அளவில் புகழ் பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஒருகாலத்தில் தென்னிந்தியாவையே குறிப்பாக தமிழ், மலையாள திரையுலகை கலக்கிய பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரபல கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும், ஷகிலா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை Huma Qureshi, நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தி, கன்னடம் உள்பட பல மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வாகி வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

'கபாலி' பட பாடல்களை கேட்க இங்கே கிளிக் செய்யவும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.