close
Choose your channels

சக பயணிக்கு பிசினஸ் கிளாஸை விட்டு கொடுத்த தல தோனி: வைரலாகும் வீடியோ

Saturday, August 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைத்த தல தோனி அவர்கள் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தவுடன் சமூக வலைதளமே ஸ்தம்பித்தது என்பது தெரிந்ததே. பிரதமர் மோடி உள்பட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவரை இந்திய அணியே மிஸ் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது தோனியின் விளையாட்டு திறமைக்காக மட்டுமின்றி அவரது எளிமை, நல்ல குணம் மற்றும் அவருடைய மனிதாபமும் முக்கிய காரணம். தோனியின் மனிதாபிமான செயல்கள் பலமுறை வெளிப்பட்டு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையில் இருந்து தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐக்கிய அமீரக நாட்டிற்கு விமானத்தில் சென்றனர். அப்போது எகனாமிக்ஸ் கிளாஸில் உட்கார்ந்து இருந்த பயணி ஒருவரிடம் சென்ற தல தோனி ’உங்களுடைய கால் நீளமாக இருப்பதால் நீங்கள் என்னுடைய பிசினஸ் கிளாஸில் உட்காந்து கொள்ளுங்கள் நான் எக்னாமிக் கிளாஸில் வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இது அந்த பயணியை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. கேப்டன் என்னை எப்போதுமே ஆச்சரியப்படுத்துவார் என்று வீடியோ உடன் கூடிய ஒரு டுவிட்டை அந்த பயணி பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் தோனியின் மனிதாபிமான செயல் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.