உறவினருடன் செல்பி எடுத்த மனைவி: ஆத்திரத்தில் கணவன் செய்த விபரீத செயல்!

  • IndiaGlitz, [Tuesday,May 10 2022]

உறவினருடன் செல்பி எடுத்த மனைவி மீது கோபம் கொண்டு கணவன் செய்த விபரீத செயலால் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் எட்வர்ட் ஜான் - கிரேஸ் பியூலா தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். எட்வர்ட் ஜான் மதுவுக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி தனது சகோதரியின் திருமணத்திற்கு கிரேஸ் பியூலா சென்ற போது அங்கு உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார். இதை பார்த்த எட்வர்ட்ஜான், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கிரேஸ் பியூலா தனது மகளுடன் தங்கை வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இந்த எட்வர்ட் ஜான், மனைவியிடம் தாமதமாக வந்தது ஏன் என்று கேட்டு தகராறு செய்தார். மேலும் உறவினருடன் செல்பி எடுத்தது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென எட்வர்ட் ஜான் கத்தியை எடுத்து கிரேஸ் பியூலா கழுத்தில் குத்தி உள்ளார். இதனால் படுகாயமடைந்த கிரேஸ் பியூலாவை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கிரேஸ் பியூலா மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் எட்வர்ட் ஜான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு 12 லட்சத்தில் வீடு கட்டு கொடுத்த பிரபல தொழிலதிபர்!

 கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு பிரபல தொழிலதிபர் 12 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார் .

பிறந்த நாளில் சாய்பல்லவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 51வது தயாரிப்பு திரைப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பதும் சிவகார்த்திகேயனின் 21வது படமாக

விக்னேஷ் சிவன் - நயன் தாரா திருமணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான நபர்: வருத்தத்துடன் பேட்டி!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்தால் மன உளைச்சலுக்கு ஆளானதாக விக்னேஷ் சிவனின் உறவினர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வெற்றிமாறனின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட தனுஷ்!

வெற்றிமாறனின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டுள்ளார்.

அஜித் படத்திற்காக தோனி ஸ்டைலில் வேலை செய்ய போகிறேன்: விக்னேஷ் சிவன்

அஜித்தின் 62வது படத்தை இயக்கயிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், 'தல தோனி பாணியில் 'அஜித் 62' படத்தில் பணிபுரிய இருக்கிறேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .