ஆன்ட்டி பிகிலி' நான் தான், அப்ப பிகிலி யாரு? பிரபல நடிகர் டுவிட்

  • IndiaGlitz, [Saturday,March 12 2022]

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிகிலி என்றால் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வைரலானது என்பது தெரிந்ததே. அதன் பின்னர் திடீரென ’ஆன்ட்டி பிகிலி’ என்றால் யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டதால் திரையுலக பிரபலங்கள் கூட யார் இந்த பிகிலி, ’ஆன்ட்டி பிகிலி’? என்ற கேள்வியை எழுப்பினர்.

பிகிலி என்பது ஒரு திரைப்படத்தின் புரமோஷன் தான் என்று அனைவருக்கும் புரிந்தாலும் யார் நடித்த படம்? என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்தது. ஒரு சிலர் இது விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில் என்றும் அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டில் என்றும் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பிகிலி மற்றும் ’ஆன்ட்டி பிகிலி’ ஆகிய இரண்டுமே தன்னுடைய படத்தில் வரும் கேரக்டர்கள் தான் என்று பதிவு செய்து கடந்த இரண்டு நாட்களாக நிலவிவந்த புதிருக்கு விடை அளித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்து இயக்கி வரும் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தில் ’ஆன்ட்டி பிகிலி’ என்ற கேரக்டரில் தான் நடித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அப்ப பிகிலி என்றால் யார் என்ற கேள்வியை அவரே எழுப்பியுள்ளார். விரைவில் பிகிலி யார் என்பதை அவரே அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பச்சை காஸ்ட்யூமுக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்: பதிலடி கொடுத்த சமந்தா!

நடிகை சமந்தா சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது பச்சை கிளாமர் காஸ்ட்யூமில் வருகை தந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் நாங்கள்: காஜல் அகர்வால் வெளியிட்ட க்யூட் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இதுதான் நாங்கள்' என கேப்ஷனாக பதிவு செய்த கியூட் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிகினி உடையில் கடலில் குளிக்கும் பிக்பாஸ் ஓவியா: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஓவியா பிகினி உடையுடன் கடலில் குளிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

விஷால்-லைகா நிறுவனம் இடையிலான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஷால் மற்றும் லைக்கா நிறுவனம் இடையிலான வழக்கில் இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது 

சமந்தாவின் பச்சை காஸ்ட்யூமின் விலை இத்தனை லட்சமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

கருப்பு மற்றும் பச்சை காஸ்டியூம் அணிந்த சமந்தாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதை பார்த்தோம்.