விஜய்க்கு 50 வயது, எனக்கு 33; ஆனாலும் அரசியலில் நான் சீனியர்: விஜய பிரபாகரன்


Send us your feedback to audioarticles@vaarta.com


கேப்டன் விஜயகாந்த் மகன் மற்றும் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய்யை விட நான் அரசியலில் சீனியர் என்று அவரே கூறினார் என தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தேமுதிக இளைஞரணி செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜய்யை இதுவரை நான் ஓரிரு முறை மட்டுமே சந்தித்துள்ளேன். கடைசியாக ‘கோட்’ படத்தின் ரிலீஸ் போதும், எங்கள் வீட்டிற்கு வந்து என்னை சந்தித்தார். ஆனால் அதே நேரத்தில், அரசியல் கூட்டணி குறித்து இதுவரை அவரிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை," என்று தெரிவித்தார்.
விஜய்யின் அரசியல் செயல்பாடு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "எனக்கு 33 வயது, அவருக்கு 50 வயது. அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம். அவர் என்னைவிட சீனியர், ஆனால் அவரே என்னிடம் அரசியல் குறித்து பேசியபோது, ‘நீங்கள்தான் அரசியலில் என்னைவிட சீனியர்’ என்று பெருந்தன்மையாக கூறினார். அதை நான் பெருமையாக ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன்.
ஆனால் அதே நேரத்தில், சினிமாவை பொறுத்தவரை, விஜய் அனுபவம் உள்ளவர். என்னைவிட பெரிய ஆள். இன்று அவர் ஒரு கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் பின்னாடி பல லட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். அது அவருடைய பலம். 20 வருடங்களுக்கு முன்பு, கேப்டன் பின்னாலும் பல லட்சம் இளைஞர்கள் இருந்தார்கள். அது தேமுதிகவின் பலம்," என்று கூறினார்.
2026ல் ஆட்சியை பிடிப்போம் என்று விஜய் கூறியது குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு "நான் அதை எப்படியும் பார்க்கவில்லை. அது அவருடைய நம்பிக்கை. மக்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
#Watch | "நான் அரசியலில் விஜய்-க்கு சீனியர்.."
— Sun News (@sunnewstamil) May 14, 2025
- தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் செய்தியாளர்கள் சந்திப்பு#SunNews | #DMDK | #TVKVijay | #Vijayaprabakaran pic.twitter.com/bYT8Lg30cv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com