விஜய்சேதுபதியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: தமிழக அமைச்சர்

  • IndiaGlitz, [Monday,April 04 2022]

நடிகர் விஜய் சேதுபதியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் என தமிழக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. 16 மாநில ஆண்கள் அணி மற்றும் 15 மாநில பெண்கள் அணி இந்த போட்டியில் பங்கேற்க உள்ளன.

இந்த போட்டியின் தொடக்க விழாவில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நடிகர் விஜய்சேதுபதி, ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி, ‘ விளையாட்டு என்ற ஒன்று தான் ஜாதி பாகுபாடு அனைத்தையும் முடக்கி, நம்மை ஒன்றாக இணைக்கிறது என்றும், விளையாட்டு என்பது நம்முடைய உடம்பை நமக்கு யார் என்பதை அறிமுகப்படுத்துகிறது என்று கூறினார். மேலும் விளையாட்டை போட்டியாக மட்டும் பார்க்காமல் அறிவுப்போட்டியாகவும்ம் பார்க்க வேண்டும் என்று கூறினார் .

இதனை அடுத்து பேச வந்த நிதி அமைச்சர் தியாகராஜன், ‘சினிமா துறையில் இருந்து கொண்டு எளிதாக கருத்தை தைரியமாக சொல்லி, அரசாங்கம் யாராக இருந்தாலும் பரவாயில்லை என்ற தன்மையுடன், சிந்தனையுடன் பேசுபவர் விஜய் சேதுபதி. அந்த வகையில் அவருடைய பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் என்று கூறினார்.

More News

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' முழுக்கதை இதுதான்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லரில் இருந்து இந்த படத்தின் கதையை

12வது முறையாக விஷாலுடன் இணைந்த பிரபலம்: குவியும் வாழ்த்துக்கள்!

விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபலம் ஒருவர் 12வது முறையாக இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .

'ஆர்.ஆர்.ஆர்' வசூலை இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிட்ட மத்திய அமைச்சர்!

பிரமாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் வசூலை இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது நாடு முழுவதும்

பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் ஹேக்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகைகளின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக வெளிவரும் தகவல்களை அவ்வப்போது

போதைப்பொருட்களுடன் உல்லாச பார்ட்டி: பிரபல நடிகரின் மகள் கைதா?

போதைப் பொருட்களுடன் உல்லாச பார்ட்டி நடத்தியதாக பிரபல நடிகரின் மகள், காவல்துறை அதிகாரியின் மகள், எம்பியின் மகன் உள்பட ஒரு சில முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம்