நான் பாவனி ரெட்டி கண்ட்ரோல்ல தான் இருக்கிறேன்: கமல் முன் ஒப்புக்கொண்ட அமீர்!

நான் பாவனி ரெட்டி கண்ட்ரோலில் தான் இருக்கின்றேன் என்று கமல்ஹாசன் முன் அமீர் கூறியிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அமீர் மற்றும் பவானி ரெட்டி ஆகியோர்களும் உண்டு என்பதும், இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது. அமீர் தனது காதலை வெளிப்படையாக கூறிவிட்ட நிலையில் பாவனி ரெட்டி தனது காதலை வெளிப்படையாக இதுவரை கூறவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இருவரும் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது பிபி ஜோடிகள் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் - பாவனி ரெட்டி இருவரும் ஜோடியாக நடனம் ஆடுகிறார்கள்.

இந்த நிலையில் வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் நடித்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பாடல்களுக்கு போட்டியாளர்கள் நடனம் ஆடுகின்றனர்.

அந்த வகையில் ’மன்மதன் அம்பு’ படத்தில் இடம்பெற்ற ‘நீ நீல வானம்’ என்ற பாடலுக்கு பாவனி ரெட்டி மற்றும் அமீர் நடனம் ஆடினர். மிக அபாரமாக இருவரும் நடனமாடியதை பார்த்த நடுவர் ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன் ஆகியோர் ஆச்சரியமடைந்தனர்.

அப்போது அமீர் கூறியபோது ’இந்த பாடலை பொறுத்தவரைக்கும் நான் நடன இயக்குனரா? அல்லது பாவனி நடன இயக்குனரா? என்பது சந்தேகமாக இருக்கிறது என்றும், முதல் மூன்று நாட்கள் மட்டும் தான் அவர் என் கண்ட்ரோலில் இருக்கிறார் என்றும், அடுத்த மூன்று நாட்கள் நான் அவருடைய கண்ட்ரோலில் இருக்கிறேன் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகர் தொடர்ந்த அவதூறு வழக்கு: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிரடியாக தீர்ப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

ஷாருக்கான் - அட்லி படத்தின் டைட்டில் இதுதான்: வைரலாகும் தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு

கலர்ஃபுல் பிகினி உடையில் தனுஷ் பட நடிகை: வைரல் புகைப்படம்

தனுஷ் படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைத்தளத்தில் கலர்ஃபுல் பிகினி உடையுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது

செம கிளாமர் வொர்க்-அவுட் போட்டோஷூட்: வைரலாகும் ஷெரீன் புகைப்படங்கள்!

தனுஷ் நடித்த 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர், பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் பிரபலமானார்.