ஹீரோவாக நடிப்பது உண்மையா? யோகிபாபு விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,September 11 2018]

கோலிவுட் திரையுலகில் நல்ல மார்க்கெட்டில் இருக்கும் காமெடி நடிகர்கள் திடீரென ஹீரோவாக ஆசைப்பட்டு மார்க்கெட்டை இழந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் கூட ஒரு முன்னணி காமெடி நடிகர் ஹீரோ ஆசையினால் காணாமல் போனதை கோலிவுட் அறியும்

இந்த நிலையில் இன்றைய காலகட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு, ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும், இனிமேல் அவர் ஹீரோவாக மட்டுமே நடிப்பார் என்றும் இணையதளங்களில் செய்தி வெளிவந்தது.

இந்த செய்திகளுக்கு யோகிபாபு தற்போது விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய முகத்திற்கு ஹீரோ எல்லாம் செட் ஆகாது. நான் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று வெளிவந்துள்ள செய்தி பொய்யானது. எனக்கு காமெடி வேடம் மட்டுமே பொருத்தமாக இருக்கும்' என்று கூறியுள்ளார். யோகிபாபுவின் புத்திசாலித்தனமான முடிவுக்கு இணையதளவாசிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.