close
Choose your channels

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முக்கிய அறிவிப்பு!

Tuesday, April 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இளம் இசைப்புயல் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதும் கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்ததும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் அப்டேட்களை கேட்டு அவ்வப்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விஜய் ரசிகர்களின் இந்த ஆர்வத்தை பயன்படுத்தி கொள்ளும் ஒருசில நெட்டிசன்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெயரில் போலி கணக்குகளை சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்து மாஸ்டர் படத்தின் அப்டேட்களை அவர் தெரிவிப்பது போன்று தெரிவித்து வருகின்றனர். இதனால் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்துள்ளார். தான் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என்றும் டுவிட்டரில் மட்டுமே தான் கணக்கு வைத்திருப்பதாகவும் அதில் வரும் தகவல்கள் மட்டுமே உண்மையானது என்றும் விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்து விஜய் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்ம் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.