close
Choose your channels

நான் இன்னும் மைனர், எனவே பிக்பாஸில் கலந்து கொள்ள முடியாது: பிகில் நடிகை

Wednesday, May 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தான் இன்னும் மேஜர் இல்லை என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தாலும் தன்னால் கலந்து கொள்ள முடியாது என பிகில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழில் பிக் பாஸ் சீசன் ஆரம்பித்து மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் நான்காவது சீசன் வெகுவிரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்கான போட்டியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் கொரோனா காரணமாகவே இந்த நிகழ்ச்சியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளும் தளபதி விஜய் நடித்த ’பிகில்’ படத்தில் பாண்டியம்மாள் என்ற முக்கிய கேரக்டரில் நடித்தவருமான இந்திரஜா, சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடும் போது ஒரு ரசிகர் ’பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தால் செல்வீர்களா? என்று கேட்க, அதற்கு அவர் ’சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் சரியாக அமைந்தால் நான் செல்வேன் என்றும், ஆனால் நான் இன்னும் மேஜர் இல்லை, அதனால் அந்த நிகழ்ச்சியில் என்னை அனுமதிக்க மாட்டார்கள் ’என்று கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos