எனது பெயரில் அஜித் படத்தலைப்பு. பிரபல பாடலாசிரியர்

  • IndiaGlitz, [Thursday,February 02 2017]

தல அஜித் நடித்து வரும் 57வது படமான 'விவேகம்' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று அதிகாலை வெளிவந்து உலகம் முழுவதும் இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அஜித்தின் பிட்னெஸ் உடலமைப்பு, அட்டகாசமான பின்னணியை அஜித் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை கோலிவுட் திரையுலகினர் தங்களுடைய சமூக வலைத்தளத்தை பாராட்டியும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ள பிரபல பாடலாசிர்யர் விவேகா, தன்னுடைய பெயர் இனிஷியலுடன் படத்தின் டைட்டிலாக அமைந்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இவருடைய பெயர் விவேகா M என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' படத்தின் மூலம் பாடலாசிரியர் ஆன விவேகா, '36 வயதினிலே', 'ஒருநாள் கூத்து', 'கபாலி', 'ரெமோ', 'கொடி' உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'காற்று வெளியிடை' படத்தின் அழகியே பாடல் வரிகள்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் 'அழகியே' என்ற பாடல் வரிகள் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த பாடலின் வரிகளை பார்

'சி3' தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அதிரடி அறிவிப்பு

சூர்யா நடித்துள்ள 'சி3' படம் வரும் 9ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமனான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் நேற்று புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது...

கனடாவில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை துவக்கி வைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. இசை மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு ஆகியவற்றிலும் அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்...

அஜித்தை அட்டகாசமாக மாற்றிய ஃபிட்னெஸ் பயிற்சியாளர் யார் தெரியுமா?

அஜித் நடித்த 'வேதாளம்' படப்பிடிப்பின் கடைசி நாளில் அவருக்கு காலில் அடிபட்டதால் அந்த வலியோடு அந்த படப்பிடிப்பை முடித்து கொடுத்தார். அதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்து சில மாதங்கள் முழு ஓய்வில் இருந்த அஜித்தின் உடல் எடையும் கொஞ்சம் அதிகரித்திருந்தது...

'அஜித் 57' படத்தின் அட்டகாசமான டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்

அஜித் நடித்து வரும் 57வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் எப்படி இருக்கும், டைட்டில் என்னவாக இருக்கும் என்று கோடிக்கணக்கான அஜித் ரசிகர்கள் எந்தவித தகவலும் தெரியாமல் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஃபர்ஸ்ட்லுக் வெளிவருவதற்கு சில மணி நேரம் முன்பே அஜித் வெற்று உடம்புடன