'குபேரா' படத்தில் நான் தான் ஹீரோ.. என் கேரக்டரை சுற்றி தான் கதை நகரும்: நாகார்ஜூனா


Send us your feedback to audioarticles@vaarta.com


'குபேரா' படத்தின் ஹீரோ யார் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட தனுஷ் என்றுதான் சொல்லும் என்ற நிலையில், 'குபேரா' படத்தின் ஹீரோ நான் தான் என்றும், தன்னுடைய கேரக்டரை சுற்றிதான் அந்த படத்தின் கதை நகரும் என்றும் நாகார்ஜுனா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான 'குபேரா' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழை விட தெலுங்கில் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளதாகவும், தமிழை விட தெலுங்கில் அதிக வசூல் செய்திருப்பதாகவும், அதற்கு நாகார்ஜுனாவின் அழுத்தமான கேரக்டர் தான் காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று நாகார்ஜுனா அளித்த பேட்டியில், "குபேரா படத்தின் ஹீரோ நான் தான். இந்த படத்தின் மொத்த கதையும் என்னுடைய தீபக் என்ற கேரக்டரை சுற்றியே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை தீபக் தான் கதையை நகர்த்திச் செல்வான்," என்று கூறியுள்ளார். நாகார்ஜுனாவின் இந்த கருத்து தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் இந்தப் படத்தில் உயிரை கொடுத்து நடித்துள்ளார் என்றும், அவருக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்கும் என்றும் தமிழ் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், இந்த படத்தின் ஹீரோ நான் தான் என்று நாகார்ஜுனா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, 'கூலி' படம் வந்த பிறகும் நாகார்ஜுனா சொல்வாரா என்ற கேள்வியும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது.
#Nagarjuna: I felt like I was the hero of #Kuberaa. 🤯 The whole story revolves around Deepak. It’s Deepak’s film from start to finish.
— KARTHIK DP (@dp_karthik) June 21, 2025
Such a CHEAP EGOISTIC senior artist behaviour!
It’s #Dhanush who gave the film its soul.
pic.twitter.com/1YwzQZIEjO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments