close
Choose your channels

சூரி ஹீரோவாகும் படத்தில் நானும் நடிப்பது சந்தோஷம்: விஜய்சேதுபதி

Wednesday, February 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது எனக்கு மிகவும் சந்தோசம் என்று மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூறியுள்ளார்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த நிலையில் இளையராஜாவின் புதிய ஒலிப்பதிவு கூடம் இன்று திறக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் பாடல்கள் முதல் முதலாக இந்த ஒலிப்பதிவு கூடத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது

இந்த ஒலிப்பதிவு கூடத்தின் திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் பேசியபோது ’இளையராஜா அவர்கள் ஒரு மிகப் பெரிய சாதனையாளர். அவருடைய மிகப்பெரிய ரசிகர் நான். இந்த ஒலிப்பதிவு கூடத்தில் முதல் முதலாக எங்கள் படத்தின் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படுவதும் அதில் நான் கலந்து கொள்வேன் என்பதையும் நினைத்துக்கூட பார்க்கவில்லை

குறிப்பாக சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது எனக்கு பெரிய சந்தோசம். அதேபோல் வெற்றிமாறன் அவர்களுடம் பணிபுரிய வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. அந்த ஆசையும் இப்போது நிறைவேறியுள்ளது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று தெரிவித்துள்ளார்

தமிழ் திரையுலகின் பிரபல ஹீரோவாக இருக்கும் விஜய்சேதுபதி, ஹீரோவாக அறிமுகமாகும் சூரியின் படத்தில் நடிப்பது சந்தோஷம் என ஈகோ இல்லாமல் கூறியிருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.