அவர் அசையாமல் இருப்பதை பார்க்க என் மனம் தாங்காது: கே.ஜே.யேசுதாஸ்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று மதியம் காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரை உலகில் மட்டுமின்றி அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் உள்பட பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கும், பிரபல பாடகர் கேஜே யேசுதாஸ் அவர்களுக்கும் இருந்த நெருக்கமான நட்பு அனைவரும் அறிந்தது தான். இந்த நிலையில் எஸ்பிபி மறைவுக்கு கேஜே யேசுதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்பிபி அவர்கள் அசையாமல் இருப்பதைப் பார்ப்பதற்கு என் மனம் தாங்காது என்று அவர் எஸ்பிபி மறைவு குறித்து அவர் கூறியுள்ளார்

எஸ்பிபி நடித்த ’சிகரம்’ என்ற படத்தில் அவர் கம்போஸ் செய்த ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு’ என்ற பாடலை கேஜே ஜேசுதாஸ் பாடினார் என்பதும் இந்த பாடல் இன்றளவும் கோடிக்கணக்கானோர் மனதில் இடம்பிடித்த பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி எஸ்பிபி மற்றும் கேஜே யேசுதாஸ் இணைந்து ’காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ உள்பட பல பாடல்களை இணைந்து பாடி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் வெளியான ‘கேணி’ என்ற படத்தில் ’அய்யாசாமி, இது நம்ம பூமி’ பாடலை இருவரும் இணைந்து பாடியது மட்டுமின்றி அவர்கள் பாடிய காட்சிகளும் அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

கட்சிக்குள் நிலவும் பனிப்போரை விலக்கி… விடிவெள்ளியாக வளர்ந்து நிற்கும் தமிழக முதல்வர்!!!

அதிமுக கட்சியில் கடும் பனிப்போர் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில் தற்போது தமிழக..,

பாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்: எஸ்பிபிக்கு நயன்தாரா இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அறிக்கை ஒன்றின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

எஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்திய தளபதி விஜய்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று பிற்பகல் மரணமடைந்த நிலையில் அவருடைய மறைவிற்கு இந்திய குடியரசு தலைவர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர் 

39 கன்னிவெடிகளை பாதுகாப்பாக அகற்றிய சுண்டெலி… பாராட்டி மகிழ்ந்த அரசாங்கம்!!!

கம்போடியா நாட்டில் எல்லைப் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகளவில் கன்னிவெடிகள் பதிக்கப்

குடும்பத் தலைவி என்றால் சும்மாவா??? மும்பை நீதிமன்றத்தில் சூடு கிளப்பிய வழக்கு!!!

சாலை விபத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணின் இறப்புக்கு நஷ்ட ஈடு கேட்ட வழக்கு ஒன்றில் மகாராஷ்டிரா நீதிமன்றம்