“ஒரு பெற்றோராக, குடிமகனாக கவலை கொள்கிறேன்”- ஹிருத்திக் ரோஷன். #CAA #NRC

நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, ஒரு பெற்றோராக இந்திய குடிமகனாக கவலை கொள்கிறேன் என ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களின் மீதான தாக்குதலை கண்டித்து சென்னை பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து, ஒரு பெற்றோராக இந்திய குடிமகனாக கவலை கொள்கிறேன். அங்கு விரைவில் அமைதி திரும்ப பிரார்த்தனை செய்கிறேன். சிறந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் இருந்தே பாடங்களை கற்கின்றனர். உலகின் இளைய ஜனநாயகத்திற்கு சல்யூட்” எனத் தெரிவித்துள்ளார்.
 

More News

பீகாரில் எந்த காரணத்திற்காகவும் என்.ஆர்.சி நுழையமுடியாது..! நிதிஷ் குமார்.

என்ஆர்சி ஏன் எதற்காக என கேள்வி எழுப்பியுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அதனை அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளார்.

ஆட்டோ டிரைவரை பயமுறுத்தி பிராங்க் ஷோ: 6 இளைஞர்கள் கைது

பிராங்க் ஷோ என பொது மக்களை பயமுறுத்தும் வீடியோக்கள் தற்போது யூடியூபில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வீடியோக்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பதால்

உதயநிதியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அரசியல் பணிகளில் பிசியாக இருந்தபோதிலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ', கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் 'ஏஞ்சல்' மற்றும் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படம்

கியர் போட்ட கல்லூரி மாணவிகள்: சஸ்பெண்ட் ஆன பேருந்து டிரைவர்!

கேரளாவில் அரசு பேருந்து ஒன்று கொண்டிருந்த அந்த பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் ஒருவர் கல்லூரி மாணவிகளுக்கு கியர் போட கற்றுக் கொடுத்ததை

கூகுள், ஆண்ட்ராய்டுலாம் வேணாம்.. நாங்களே ஒரு OS செய்யப் போறோம்..! Facebook அதிரடி.

சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் தனக்கென ப்ரேத்யேக இயங்குதளம் ஒன்றை உருவாக்கி வருகிறது. எதிர்காலத்திலும் கூகுளின் ஆண்ட்ராய்டை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க இந்த புதிய இயங்குதளத்தை உருவாக்கி வருகிறது.